சங்கராபுரம், அக்.4: சங்கராபுரம் அருகே உள்ள அருளம்பாடி கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக மூங்கில் துறைபட்டு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் அந்த கிராமத்தில் சோதனை செய்ததில் அங்கு கோவிந்தன் மகன் முருகன் (27) என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement