மரக்காணம், ஆக.2: மரக்காணம் அருகே கந்தாடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது ஏரிக்கரை அய்யனார் கோயில். இக்கோயில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் அய்யனார் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் அபிஷேக ஆராதனைகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் இக்கோயிலுக்கு ஆடி...
மரக்காணம், ஆக.2: மரக்காணம் அருகே கந்தாடு ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ளது ஏரிக்கரை அய்யனார் கோயில். இக்கோயில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் அய்யனார் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் அபிஷேக ஆராதனைகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் இக்கோயிலுக்கு ஆடி மாத திருவிழா செய்ய அப்பகுதி முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி ஏற்பாடு செய்த பிறகு கோயிலை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கோயில் எதிரில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் கோயிலின் உள்ளே இருந்த பித்தளை வேல், மணி, விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். திருடுபோன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.