பண்ருட்டி, ஆக. 1: பண்ருட்டியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதிக்கு சிறுமி சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித் குமார் (27), சிறுமியின் கையை பிடித்து இழுத்து அவரது ஆடைகளை களைய முயற்சி செய்தார். இது குறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
+
Advertisement