தூங்கிய மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறித்துச்சென்ற முகமூடி ஆசாமிகள் போலீசார் விசாரணை வேலூர் அருகே இரவு வீட்டின் கதவை உடைத்து
வேலூர், அக்.30: வேலூர் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறித்து சென்ற மூகமுடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்சா(70). இவர் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அம்சா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் தூங்கினார். நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள், அம்சா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மகன், மருமகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அரியூர் போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
