இளம்பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் ராணுவ வீரர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்
வேலூர், அக்.30: இளம்பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் விடுக்கும் ராணுவ வீரர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு எஸ்பி மயில்வாகனன் தலைமையில், ஏடிஎஸ்பி பாஸ்கரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இதில் காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவில் கூறியதாவது: நான், ேக.வி.குப்பத்தை சேர்ந்த ராணுவ வீரரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஜம்மு- காஷ்மீரில் வசித்து வந்ேதாம். நான் கர்ப்பம் அடைந்த பிறகு என்னை எனது தாய்வீட்டில் விட்டுவிட்டு சென்றார். குழந்தை பிறந்த பிறகு என்னை வந்து பார்க்கவில்லை. என்னிடம் இருந்து விவாகரத்து கேட்டு வக்கீல் மூலம் திடீரென நோட்டீஸ் அனுப்பினார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக என்னுடைய போட்டோவை வேறொரு நபருடன் ஆபாசமாக இருப்பதுபோன்று மார்பிங் செய்து எனது ெசல்போனுக்கு அனுப்பி வைத்து மிரட்டுகிறார். மேலும் இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு வருகிறார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
