வேலூர், ஜூலை 30: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர் மக்கானை சேர்ந்தவர் கிண்டி(எ) இளங்கோவன்(49), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2021ம் ஆண்டு வேலூைர சேர்ந்த 15 வயது சிறுமியை அழைத்து ஆபாச சைகை காண்பித்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிண்டி(எ) இளங்கோவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்த இளங்கோவனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.
+
Advertisement