பேரணாம்பட்டு, செப்.26: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செழியன்(22). இவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மைனர் பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றபோது, திருமண வயது பூர்த்தியடையாதது குறித்து கண்டறிந்த மருத்துவர்கள் மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊர் நல அலுவலர் இந்திராகாந்தி நேற்று கொடுத்த புகாரின்பேரில் மேல்பட்டி போலீசார் செழியன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement