குடியாத்தம், செப். 26: குடியாத்தத்தில் சட்டத்திற்கு எதிராக ஒப்பந்த கட்டிட பணி செய்து வந்த ஒன்றிய பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் 9வது வார்டு கவுன்சிலர் ஹேமலதா, கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஊராட்சிகள் சட்டத்திற்கு எதிராக அவரது பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் ஒப்பந்த கட்டிட பணி செய்து வந்துள்ளார். இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதன்படி அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி ஒப்பந்த பணிகள் ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா பெயரில் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இதனால் கவுன்சிலர் ஹேமலதா கடந்த 1ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அரசு கெஜட்டில் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement