வேலூர், நவ.25: வேலூரில் ஹெல்மெட் அணியாத ஆட்டோ டிரைவருக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் சர்வீஸ் சாலையில் கடந்த 10ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரது மொபைல் எண்ணில், வேறு ஒருவரின் இருசக்கர வாகன எண்ணுடன், இவரது பெயரை குறிப்பிட்டு, அதில் வாகன வகையில் 3 சக்கர பயணியர் வாகனம் என்றும் குறிப்பிட்டு, இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்துக்காக ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததாம். அதோடு அணுக வேண்டிய அலுவலர் விரிஞ்சிபுரம் காவல் நிலைய எஸ்ஐ பெயரை குறிப்பிட்டு வந்துள்ளதாம். இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.
+
Advertisement



