ஒடுகத்தூர், செப்.25: ஒடுகத்தூர் அடுத்த வளையல்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கோபி(23), இவர் அக்ரஹாரம் ஊராட்சியில் தற்காலிக பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று பசுவநாயனி குப்பம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பைக்கில் வந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்த டிராக்டர் எதிரே வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபியின் வலது கால் 3 துண்டுகளாக உடைந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான பைக் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement