வேலூர் செப்.23: வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முபாரக்(45). இவர் காட்பாடியில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்கிறார். கடந்த 18ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடை எதிரே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார். பின்னர் பைக்கை பார்த்தபோது காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வடக்கு போலீசில் முபாரக் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
+
Advertisement