குடியாத்தம், செப்.22: குடியாத்தத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு சமையல் மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் ஆசிம் மகன் ரபீக் (40), சமையல் மாஸ்டர். இவரது மனைவி ரிஹானா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ரபீக் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சிலரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களால் தான், தற்கொலை செய்து கொள்ளவதாக, வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் படுக்கை அறைக்குச் சென்று உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று சடலத்தை மீட்டனர். தகவல் அறிந்ததும், டவுன் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சகலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடியோவில் குறிப்பிட்டுள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.