வேலூர், ஆக.21: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 6 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். தமிழகத்தில், பணியாற்றிய வரும் 57 துணை ஆட்சியர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உத்தவிட்டுள்ளார். இதில், வேலூர் தனித்துணை ஆட்சியர்(நில எடுப்பு) கண்ணப்பன், வேலூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும்(பொது), வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியராகவும்(முத்திரைத்தாள்), சேலம் மண்டல அண்ணா நிருவாக பளிணாயர் கல்லூரி இளநிலை நிருவாக அலுவலர் மாறன், வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியராகவும்(சமூக பாதுகாப்பு திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) செல்வம், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைனயினர் நல அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ்பாபு, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் துணை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலளார் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement