குடியாத்தம், செப். 19 : குடியாத்தத்தில் மழையின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் செல்போனில் மின் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதில் செதுக்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகளில் சிலர் மின்துறை ஊழியருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் அப்பகுதிக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு மீண்டும் மின் சப்ளை வழங்கினர். இந்நிலையில் செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து குடியாத்தம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஜோதி, டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement