Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் திருவலம் அருகே

திருவலம், செப்.19: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த குகையநல்லூர் ஊராட்சி பொன்னை-திருவலம் சாலையில் எஸ்ஐ மஞ்சுநாதன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தும்ேபாது, டிராக்டரை மணலுடன் அங்கேயே விட்டு தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் வண்டியை சோதனையிட்டதில் அனுமதியின்றி 1 யூனிட் ஆற்று மணலை அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் தப்பியோடிய செம்பவராயநெல்லூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(24), ராணிப்பேட்டை மாவட்டம் தக்கான்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் காமராஜ்(29) ஆகிய இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.