சிறுமிக்கு பாலியல் தொல்லை டெய்லருக்கு 5ஆண்டு சிறை வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பு விளையாடிக்கொண்டிருந்த
வேலூர், ஆக.19: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டெய்லருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(40), டெய்லர். இவர் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி விளையாடி கொண்டிருந்த 12 வயது சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ெஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட, ஜெயகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜெயகுமாரை, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார்.