வேலூர், செப்.18: வேலூர் மத்திய சிறையில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கைதி திடீரென உயிரிழந்தார். வேலூர் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த சங்கர்(77) என்பவர், பாலியல் வழக்கில் ஆரணி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 20 ஆண்டு சிறை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால், பாதிக்கப்பட்ட சங்கர், கடந்த மாதம் 27ம் தேதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement