வேலூர், அக்.17: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து வெயில் காய்ந்த நிலையில், மதிய நேரத்தில் கருமேகம் திரண்டு திடீரென இடிமின்னலுடன் மழை பெய்தது. அதேபோல் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பொன்னை போன்ற பகுதிகளில் மதிய நேரத்தில் மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. மேலும் அணைக்கட்டில் லேசான சாரல் மழையும், மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்க மழை பெய்தது. பருவமழையினால் நீர்நிலைகள் நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
+
Advertisement