ஒடுகத்தூர், அக்.17: ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில் உள்ள பெட்டி கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார் அப்பகுதியில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அதனை அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் இருந்து சுமார் 2 கிலோ குட்காவை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முருகானந்தனை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement