வேலூர், அக்.16: தமிழகத்தில் இன்றுதான் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிைல ஆய்வு மையம் அறிவித்தாலும், அதற்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் தற்போதே மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை 8 மணி வரை நிலவரப்படி பதிவான மொத்த மழை அளவு 219.20 மி.மீ. சராசரி மழை அளவு 18.27 மி.மீ. மாவட்டத்தில் பகுதிவாரியாக பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: வேலூர் 21.10, சத்துவாச்சாரி 35.10, பேரணாம்பட்டு 12, திருவலம் 14.80, காட்பாடி 41.20, வடவிரிஞ்சிபுரம் 17, மோர்தானா 8, மேலாலத்தூர் 32, குடியாத்தம் 34, ஒடுகத்தூர் 4.
+
Advertisement