வேலூர், செப்.16: பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய கல்லூரி மாணவர்கள் 2 பேர் காட்பாடியில் சிக்கினர். பெங்களூரில் இருந்து வேலூருக்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக காட்பாடி போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் வேலூர் சேண்பாக்கம் பிரதீஸ்(20), சத்துவாச்சாரி அன்பு நகர் சிவகணேஷ்(21) என்பதும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களது பையை சோதனை செய்தபோது, அதில் 4 கிராம் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ஒரு கிராம் ரூ,2500 ரூபாய் முதல் ரூ.3000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. பறிமுதல் செய்த அதன் மதிப்பு ரூ.12,000 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement