வேலூர் ஆக.15: வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுக்க கோரியும், அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வேலூர் மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம்எல், ஏஐசிசிடியு, பாலாறு பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கத்தை சேர்ந்த 11 பேரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை அனைவரையும் விடுவித்தனர்.
+
Advertisement