பொன்னை, அக். 14: பொன்னை அருகே குடிபோைதயில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் பாலியல் தொந்தரவு செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பொன்னை அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார். தெங்கால் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (எ) விநாயகம் (54), கட்டிட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மூதாட்டி வீட்டிற்கு சென்ற விநாயகம், குடிபோதையில் மூதாட்டியிடம் செல்போன் பேச வேண்டும். உன் செல்போனை கொடு என்று கேட்டுள்ளார். செல்போனை கொடுக்க மறுத்த மூதாட்டியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி நேற்று பொன்னை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement