சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16ம் தேதி
வேலூர், அக்.14: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 16ம் தேதி சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் தலைமையில் வரும் 16ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள \"காயிதே மில்லத்\" கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.