வேலூர், செப்.14: வேலூர் மாவட்டத்தில் 44 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து, டிஆர்ஓ உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் வருவாய் துறையில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர்கள் 44 பேரை பணியிட மாற்றம் செய்து டிஆர்ஓ மாலதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் விஜயகுமாரி, வேலூர் வடக்கு நகர நிலவரி திட்டம், தனி வருவாய் ஆய்வாளராகவும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, வேலூர் தெற்கு நகர நிலவரி திட்டம் தனி வருவாய் ஆய்வாளராகவும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்(முத்திரை கட்டணம்) ஜெகன்நாதன், சிப்காட் மகிமண்டலம் தனிவருவாய் ஆய்வாளர்- 1 ஆகவும், வேலூர் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சபரிகிரிவாசன், சிப்காட் மகிமண்டலம் தனி தாலுகா அலுவலக தனி வருவாய் ஆய்வாளர்-2 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் வருவாய் கோட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் இளங்கோவன், வேலூர் வடக்கு நகர நிலவரி திட்ட தனி வருவாய் ஆய்வாளராகவும், அணைக்கட்டு தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் சிவகாமி, வேலூர் கலெக்டர் அலுவலக நெடுஞ்சாலை அலகு-3 தனி தாசில்தார்(நில எடுப்பு) தனி வருவாய் ஆய்வாளர் உட்பட 44 பணியிட மாற்றம் செய்து டிஆர்ஓ மாலதி உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement