வேலூர், ஆக.14: கள்ளச்சந்தையில் விற்பதற்காக 55 டாஸ்மாக் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருபாட்சிபுரம் என்.கே.நகரில் ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி விற்கப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற பாகாயம் போலீசார், அங்கு குட்டி(எ)தனசேகர் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டில் இருந்து 180 மில்லி அளவு கொண்ட 55 ரம், பிராந்தி, விஸ்கி பாட்டில்களை கைப்பற்றியதுடன், அவற்றை அங்கு பதுக்கி வைத்து விற்க முயன்ற குட்டி(எ)தனசேகர், திருவண்ணாமலை மாவட்டம் கல்லேரிப்பட்டை சேர்ந்த அல்லிராஜா(40) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement