கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மதுபாட்டில்கள் பறிமுதல் 19 பேர் மீது போலீசார் வழக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் ரெய்டு
வேலூர், நவ.13: வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 148 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148 குவார்ட்டர் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 19 பேர் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
