போலி வாகன பதிவு எண்ணுடன் மினிவேனில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் சேர்க்காடு ஆர்டிஓ சோதனைச்சாவடியில் சிக்கியது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு படம் அதர்சில் உள்ளது
வேலூர், ஆக.13: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு போலி வாகன பதிவு எண்ணுடன் 1 டன் ரேஷன் அரிசி கடத்திய மினிவேனை சேரக்காடு ஆர்டிஓ சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் சோதனையில் சிக்கியது.
வேலூர் போக்குவரத்து மண்டல துணை ஆணையர் பாட்டப்பசாமி உத்தரவின்பேரில் வேலூர் ஆர்டிஓ சுந்தரராஜன் அறிவுறுத்தலில், மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையிலான குழுவினர் வேலூர் மாவட்டம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலை அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற மினிவேனை மடக்கி சோதனையிட்டனர்.
அதில் கோழி தீவனம் இருப்பதாக டிரைவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த வாகனம் போலி பதிவெண்ணுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து வேனில் இருக்கும் தீவனத்தை ஆய்வு செய்யும்போது அதில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆய்வு செய்வதை பார்த்ததும் டிரைவர் அங்கிருந்து திடீரென தப்பி ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து வேலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எஸ்ஐ யாசர் மவுலானாவிடம் பிடிபட்ட வேனுடன் கூடிய ரேஷன் அரிசி ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.