விபத்தில் பலியான மணி. போதை மாத்திரைகளை விற்ற 15 பேர் கைது கார், மாத்திரைகள் பறிமுதல் குடியாத்தத்தில்
குடியாத்தம், செப். 12: குடியாத்தத்தில் போதை மாத்திரைகள் விற்ற 15 பேரை போலீசார் கைது செய்து, கார், ேபாதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் ருக்மாநாதன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று குடியாத்தத்தில் இருந்து பெரும்பாடி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பலாக அமர்ந்திருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். இதனை அறிந்த இளைஞர்களில் சிலர் தப்பி ஓடினர்.
பின்னர் போலீசார் அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை மாத்திரை மற்றும் ஊசிகளை வாங்கி பயன்படுத்தி மற்றும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (27), நவீன் குமார் (20), தேவன் (25), முல்லை நகரை சேர்ந்த மோகன் (23) என தெரிய வந்தது.
மேலும் இவர்களிடம் இருந்து 40 மாத்திரை அட்டைகள் மற்றும் 5 சிரஞ்சு ஊசிகள், கார் ஆகியவை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் 26 பேர் மீது வழக்கு பதிந்து அதில் 15 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வி.கோட்டா பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிய வந்தது. அதன்படி போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த வி.கோட்டா பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (22), ராதாகிருஷ்ணன் (41) ஆகியோரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.