குடியாத்தம்,செப். 10: குடியாத்தத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடியாத்தம் அடுத்த தனலட்சுமி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரசாந்த் (22) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
+
Advertisement