வேலூர், செப்.10: வேலூரில் இருந்து ராமநாதபுரத்திற்கு 180 போலீசார் பயணம் மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நாளை (11ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 180 போலீசார் நேற்று காலை ராமநாதபுரத்திற்கு சென்றனர். பாதுகாப்பு பணி முடிந்து மீண்டும் 12ம் தேதி வேலூருக்கு திரும்புவார் என போலீசார் தெரிவித்தனர்.
+
Advertisement