வேலூர், டிச.9: குடியாத்தம் பகுதியில் பழைய நகையை உருக்கி, புதிய நகை செய்து தராமல் 16 சவரன் மோசடி செய்யப்பட்டதாக கடைக்காரர் மீது பெண் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமாரி, நர்சிங் படித்துள்ளார். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் குடியாத்தம் பகுதியில் உள்ள நகைக்கடையில் சில ஆண்டுகளுக்கு முன் சிறிதளவு பழைய நகையை கொடுத்து புதிதாக நகை வாங்கினேன். அதைத்தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு சுமார் 16 சவரன் பழைய நகையை கொடுத்துவிட்டு அதனை உருக்கி புதிதாக நகைகள் செய்து தரும்படி கேட்டேன். இதற்காக கூடுதலாக ரூ.1 லட்சம் கொடுத்தேன். ஆனால் நகைக்கடைக்காரர் இதுவரை புதிய நகையை செய்து தரவில்லை. பழைய நகைகளையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடைக்காரரிடம் நான் கொடுத்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இம்மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


