வேலூர், செப்.9: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்டில் பஸ்சில் கடத்திய வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டத்தின் வழியாக கஞ்சா கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் கலால் போலீசார் நேற்று காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ்சில் சோதனையிட்டனர். அதில் வாலிபர் வைத்திருந்த பையை சோதனையை செய்தபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது, அசாம் மாநிலம் தர்ரங் மாவட்டத்தை அமிர்அம்சா(22) என்பதும், ஓடிசா மாநிலத்தில் கஞ்சா வாங்கி, தமிழகத்தில் விற்பனை செய்ய கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்அம்சாவை கைது செய்தனர்.
+
Advertisement