குடியாத்தம், ஆக.9: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், அவர்களது வளர்ப்பு நாய்க்கு உணவு வைக்கும்போது எதிர்பாராதவிதமாக கடித்து குதறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பெற்றும், நேற்று நாய் கடித்த இடத்தில் பாதிப்பு அதிகமானது. எனவே, அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இளம்பெண் ரேபீஸ் தாக்கி இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement