வேலூர், ஆக. 7: வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் முபாரக் (26). இவர் மீது 2018ம் ஆண்டு தகராறில் ஈடுபட்டது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு வேலூர் ஜேஎம் 4 கோர்ட்டில் வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முபாரக் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி, வேலூர் வடக்கு போலீசார் முபாரக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
+
Advertisement