வேலூர், ஆக.5: கருகம்பத்தூரில் மூதாட்டியை மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் கருகம்புத்தூர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்தவர் ஜகிதாபேகம்(65). வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஜகிதாபேகத்தின்...
வேலூர், ஆக.5: கருகம்பத்தூரில் மூதாட்டியை மிரட்டி பணம், நகை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேலூர் கருகம்புத்தூர் கன்னிக்கோயில் தெருவை சேர்ந்தவர் ஜகிதாபேகம்(65). வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஜகிதாபேகத்தின் முகத்தை தலையணையால் அழுத்தி பீரோசாவியை மிரட்டி வாங்கி, 5 சவரன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஜகிதாபேகம் அளித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில், மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்த லோகேஷ்(20), சவுரி(22) என்பது தெரியவந்தது. இந்நிலையில் லோகேஷை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன், 5 பவுன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய சவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.