பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது 3 மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் பாதிப்பு வள்ளிமலை அருகே
பொன்னை ஆக. 5: வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதில் வள்ளிமலை அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, பெருமாள்குப்பம், சோமநாதபுரம், வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையில் சாலையோரங்களில் இருந்த புளியமரக்கிளை சாய்ந்தது. இதில், அப்பகுதியில் இருந்த மின் கம்பங்கள் தரையில் சாய்ந்தது. இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மின்வாரிய துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மின் பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.