வேலூர், டிச.2: டெய்லரின் வங்கிக் கணக்கில் ரூ.57 ஆயிரம் மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். குடியாத்தம் பரதராமியை சேர்ந்தவர் தையல் தொழிலாளி. இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, தன்னை வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, உங்களது வங்கி விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பிய தையல் தொழிலாளியும், மர்ம ஆசாமி கேட்ட வங்கி விவரங்களை அளித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.57 ஆயிரத்தை அந்த ஆசாமி அபேஸ் செய்து விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

