பேரணாம்பட்டு, அக்.26: பேரணாம்பட்டு பகுதியில் பல்வேறு வீடுகளில் நகை திருடிய வழக்கில் அடகு கடை உரிமையாளர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து நகைகள், பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து சென்று வருவது வழக்கமாக இருந்து வந்தது. இது குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
இந்நிலையில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த மாதம் அஜிஜிய பகுதியில் ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து, பேரணாம்பட்டு போலீசார் கைரேகைககளை வைத்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வேலூரில் உள்ள கைரேகை நிபுணர்கள்களுக்கு அனுப்பி வைத்தனர். அதில், பேரணாம்பட்டு ரஹ்மதாபாத் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன்(36) என்பவர் என தெரியவந்துள்ளது.
