வேலுார்: விபத்தில் பாதிக்கப்பட்ட எலக்ட்ரீசியனுக்கு ரூ.7.75 லட்சம் இழப்பீடு வழங்க வேலூர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.–
வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் சிவா(41), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி தனது மகன் கீர்த்திவர்மனுடன் பைக்கில் திருத்தணியில் இருந்து கேஜிகண்டிகை சாலையில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, தனியார் பஸ் மோதியதில் எலக்ட்ரீசியன் படுகாயம் அடைந்து 35 சதவீதம் மாற்றுத்திறனாளியானார்.
இதையடுத்து வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டில் விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் சிவா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் இசக்கியப்பன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் மாற்றுத்திறனாளியானதற்கு, பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கி மோதியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக 7.75 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். சட்டப்பூர்வ தத்தெடுப்பு கட்டமைப்பை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.