வேலூர், ஜூலை 29: வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கல்லூரி மாணவனின் 2 லேப்டாப்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் விக்னேஷ்(19). காட்பாடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அவருடன் படிக்கும் மாணவி ஒருவரும் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு செல்ல வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்திருந்தனர். மாணவன் தான் கொண்டு வந்த 2 லேப்டாப்புடன் கூடிய பைகளை இருக்கையின் மேற்பகுதி கேபினில் வைத்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து பார்த்தபோது 2 லேப்டாப்புகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாணவன் வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement