Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஆக.4:வேலூர் மாவட்டத்தில் 15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அவர்கள் விவரம்: காட்பாடி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ரகுராமன்- வேலூர் தாலுகா வரவேற்பு துணை தாசில்தாராகவும், வேலூர் கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு கண்காணிப்பாளர் செந்தில்குமரன்- அதே அலுவலகத்தில் தலைமை உதவியாளராகவும், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா- வேலூர் கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் மாநில நெடுஞ்சாலை (நிலம் எடுப்பு) துணை தாசில்தார் திவ்யா பிரணவம்- குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மண்டல துணை தாசில்தார் செந்தாமரை- வேலூர் அலுவலக ‘ஜி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக ‘எச்’ பிரிவு தலைமை உதவியாளர் ஜனனி- காட்பாடி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் தேவிகலா- காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் கலெக்டர் அலுவலக தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன்- மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணியாற்றிய சுகந்தி- வேலூர் கலெக்டர் அலுவலக ‘எச்’ பிரிவு தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளர் விஜயலட்சுமி-மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி துணை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய குமார்- காட்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், பேரணாம்பட்டு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை-வேலூர் வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராகவும்,

குடியாத்தம் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் தனலட்சுமி- பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலகராகவும், வேலூர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சந்தியா-குடியாத்தம் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார்- காட்பாடி தாலுகா மண்டல துணை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.