வேலூர், ஆக.3: காட்பாடியில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவனை கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 31ம் தேதி நள்ளிரவு தனது பைக்கில் காட்பாடி- திருவலம் சாலையில் தான் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பழைய காட்பாடி சினிமா...
வேலூர், ஆக.3: காட்பாடியில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவனை கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 31ம் தேதி நள்ளிரவு தனது பைக்கில் காட்பாடி- திருவலம் சாலையில் தான் தங்கியிருக்கும் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பழைய காட்பாடி சினிமா தியேட்டர் அருகே திடீரென மறைவிடத்தில் இருந்து 2 பைக்குகளில் வந்த 3 பேர் மாணவனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.
அதிர்ச்சியடைந்த மாணவன் போட்ட கூச்சலையடுத்து பைக்கில் வந்தவர்கள் இருட்டில் தப்பிச் சென்றனர். இதுபற்றி மாணவன் காட்பாடி போலீசில் நேற்று காலை புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மாணவனை மிரட்டி பணம் பறிக்க முயன்ற காட்பாடி வண்டறந்தாங்கல் பெல் குடியிருப்பை சேர்ந்த ஹரீஷ்குமார், காட்பாடி செங்குட்டையை சேர்ந்த ஷாஜகான்(20), சுந்தர்(20) ஆகிய 3 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.