சேலம், மே.5: சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (38). கடந்த 30ம் தேதி, தனது டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றார். பின் மறுநாள் பார்த்த போது டூவீலரை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜானகிராமன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சேலம் குப்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ் அரசு (33). இவர் தனது டூவீலரை கடந்த மார்ச் 26ம் தேதி வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் சென்று பார்த்த போது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து செந்தமிழ் அரசு பள்ளப்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


