Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணப்பாறையில் மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது

மணப்பாறை, ஜூன் 30: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை காவல் சரகத்தில் அரசு மதுபாட்டில்களை அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் நேற்று தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனர். அப்போது, மறவனூர் மற்றும் கல்பாளையத்தான்பட்டி ஆகிய பகுதிகளில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பனை செய்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கோடாலிகுடியை சேர்ந்த கோபால் மகன் பாலசுப்பிரமணி(30) மற்றும் ரங்கம் வட்டம் இனாம்குளத்தூரை அடுத்த ஆவரங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணா மகன் முத்துக்கண்ணு(54) ஆகியோர் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.