கன்னியாகுமரி, ஜூலை 8 : கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய குடும்ப கோயில் செல்வன்புதூரில் உள்ள மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலில் உள்ள சுடலைமாடன் சாமி சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று கோயிலில் இருந்த சிலையை அச்சன்குளத்தை சேர்ந்த நாகராஜன் மகன் அனீஸ் (19), அதே பகுதியை சேர்ந்த பாரத் (19) ஆகியோர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சுப்பிரமணியன் 2 வாலிபர்களையும் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கம்பியால் சுப்பிரமணியனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிந்து அனீஷ், பாரத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement