போச்சம்பள்ளி, ஜூலை 4: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் டிஆர்ஓ சாதனைகுறள், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மெனுவின்படி வழங்கப்பட்ட பொங்கல், பருப்பு சாம்பார் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதே போல், உணவு பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள், காய்கறிகள் முறையாக வழங்கப்படுகிறதா என பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆர்ஓ குடிநீர் வழங்க உத்தரவிட்டார். பின்னர், சாமல்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், டிஆர்ஓ சாதனைக்குறள் மாணவர்களுக்கு வழங்கும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட பணியாளர்கள் சரியான நேரத்தில் வந்து, மாணவர்களுக்கு முறையாக உணவு தயாரித்து சுகாதாரமாக வழங்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் ஆர்ஐ, விஏஓ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+
Advertisement