தொட்டியம், அக். 31: தொட்டியத்தில் பாசன வாய்க்காலில் மண்டி இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை தினகரன் நாளிதழில் வெளியான நிலையில் அதனை சுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொட்டியம் பண்ணை விடு அருகே பாசன வாய்க்கால் செல்கிறது.
தற்போது சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைய ஏதுவாக வாய்க்காலில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அது குறித்து செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பாசன வாய்க்காலில் படர்ந்திருந்த ஆகாய தாமரை செடிகளை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
  
  
  
   
