திருச்சி, ஆக.30: திருச்சியில் கடன் தொல்லையால் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எ.புதூரை சேர்ந்தவர் இப்ராஹிம் ஷா(45). கார் மெக்கானிக். தென்னூர் உழவர் சந்தை அருகே பட்டறை நடத்தி வருகிறார். இவரது தொழிலில் சரியான வருமானம் இன்மையால் கடன் பெற்றுள்ளார்.
கடன் அதிகரித்ததால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து அவரது உறவினர்கள் எ.புதூர் போலீசில் புதாக் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.