திருச்சி, ஆக.30: திருச்சியில் பெண்ணை கத்தியால் குத்திய கள்ளகாதலனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் 35வயது பெண்ணுக்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (46) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. சில நாட்களாக அந்தப் பெண் செந்தில்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 28ம் தேதி செந்தில்குமார் அந்த பெண்ணை ஸ்ரீரங்கம் அருகே பார்த்து பேச முயற்சித்துள்ளார். அவர் பேச மறுக்கவே, செந்தில்குமார் அவரை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த பெண் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.